Thursday, January 18, 2007

Her photograph..

"Somewhere in the dark recess of that wooden cupboard, there is a photo album. And somewhere the middle of the album is a photograph of Vaijayanti. She's leaning against a tree, looking up at something and smiling. What is she looking at? When was this photo taken? "

http://jikku.blogspot.com/2006/11/i-ask-you-write-10.html

4 yr old Charan ran to me asking ," thatha,who's this akka in this picture? she doesnt look any like paati!".i grabbed the photo guessing right, it was Vaijaiyanti, the most adorable girl those days.40 long yrs back,me in my wildest age,an aeroplane fanatic.How i loved to fly planes!I even dreamt of becoming a pilot.My small village has never seen planes, though in one of the rarest of rare moments, we could hear a distant "Vhrrrrrrrrr" up in the clouds.That friday evening,another "Vhrrrrrrrrrrr" in the sky.i vowed to capture the flying marvel in my dad's pre-independence model camera.i ran and ran gaping up at the sky, trying to follow the sound and i clicked my camera....I missed the plane, but i sealed Vaijaiyanti in the dark film roll. Not one,but many. She stood amazed watching the plane. I stood amazed watching her,forgetting the plane.

Sunday, December 17, 2006

சலனம் தாக்கி..


கையில் பிள்ளையுடன் அவள், மகனுடன் அவன்,
எதேச்சயாய் அந்த ரயிலில் சந்திக்க..
பார்வைகள் மோதிபோனது..

ஆச்சரியத்தின் எல்லையோ இது..
இல்லை..சலனம் தாக்கி இதயம் பிசைகிறதே..

மனமாகி பிள்ளையும் உண்டே..
இத்தனை அதிர்வுகள் கண்டதில்லை முன்னே..

இருபதின் முதல் பரவசம் போல்..
மீண்டும் பார்க்க ஏங்கி..

தப்பென்றும் தவறென்றும் உணர்ந்தும்..
தொல்லையும் விளைவும் புரிந்தும்..

என்ன விந்தை இது..
அபாயமான ஈர்ப்பல்லவோ இது..

பேச வாய்ப்பிருந்தும் பேசாமல்..
கலங்கின குட்டையாய் இரு மனங்கள்..

இயர்க்கையின் சீற்றமோ..
பாவங்களின் பலனோ..
தவிப்புகளின் தொடக்கமோ..
இறைவனின் சிக்கல்களில் ஒன்றோ..

ஏதென்று விளங்காமல்..
என்ன செய்வார்கள் பாவம்..
சலனம் தாக்கி இதயம் பிசைகிறதே..

Sunday, November 05, 2006

இம்முறை சோக‌மில்லை..


உன் நினைவின் தொல்லையில்..
பசி மற‌ந்த நிலை,

உன் கனவின் தொல்லையில்..
உற‌ங்க‌வே இல்லை,

கோடி கோடி எண்ண‌ங்க‌ள்..
தேடி தேடி கொன்ற‌தே,

என் ம‌ன‌தின் ஆசைக‌ள்..
என் உயிரின் ஓசைக‌ள்..
நீ வேண்டும் என்ற‌தே,

மெதுவாய் மெதுவாய்..
உன் சுவாச‌த்தில் நான்,

உன் மாயிலை பாத‌ம்..
என் திசை ந‌ட‌க்க,

கண் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ள்..
இன்று ப‌லிக்க‌,

"குறை ஒன்றும் இல்லை.."
பாட‌ இத‌ழ் துடிக்க‌,

நான் ர‌சிக்கும் நீ..
என‌தாக,

இத‌னினும் க‌ளிப்பில்லை,

விழிக‌ளை மீறும் ஈர‌ம்..
இம்முறை சோக‌மில்லை.

Thursday, October 05, 2006

நிஜ‌மாய் நீ இல்லை..



அந்த மழையில், நீ தந்த குடையில்..
ஈரமா அனலா ,ஏதுமே புரிய‌வில்லை,

கத்தி முனையில், நிற்கவா நடக்கவா..
தெரியாமல் தடுக்கித்தான் விழுந்தேன்,

அன்பே அன்பே என்று உருகி உருகி..
வ‌ழியும் மெழுகாகித்தான் போனேன்,

காத‌லும் அலுக்குமோ ச‌லிக்குமோ..
இரெண்டுமே நிஜ‌மான‌தே,

போதுமே இத்த‌னையும்..
என்றுமே தித்திக்கும் நீ கூட‌..
திக‌ட்டித்தான் போனாய்,

வ‌லி வ‌லி என்று க‌த‌றி க‌த‌றி..
மௌன‌மாய் உன்னை ம‌ற‌ந்தே போனேன்,

உண‌ர்ந்தேன், தெளிந்தேன், வாழ்கிறேன்..
க‌ன‌வா க‌ற்ப‌னையா..இல்லை இல்லை..
நிஜ‌மாய் நீ இல்லை என்ன‌ருகில்.

Monday, September 25, 2006

ஒரு முறை வா..


அந்த‌ அழகிக‌ளும் அழ‌க‌ல்ல‌ உன்னைவிட‌,
மின்னும் வைர‌ங்க‌ளும் தூய்மைய‌ல்ல‌ உன்னைவிட‌,

மெலிந்து தேய்ந்தாலும்..
சந்தன சிற்பம் தோற்குமே உன் பக்கத்தில,

இன்னும் எத்தனை சொல்ல..
உன் அருகாமைகள் உணர்த்திய‌ அற்புத‌ங்களை,

நீ இன்றி பிழைக்க‌வும் முடியுமோ,
நீ இன்றி வாழ்க்கையும் தொட‌ருமோ,

என் வெறுமைகளை வெல்லவே ஒரு முறை வா,
என் த‌னிமைகளை தொலைக்க‌வும் சொல்லித்தா,

நீ வேண்டும் வேண்டும் என்று..
மீண்டும் மீண்டும் கேட்கும் பிள்ளைகள்,

இந்த ம‌ழ‌லைக‌ளின் மொழிகளை..
கேட்டுப்போக‌ ஒரு முறை வா,

இத்தனை அள‌வில்லா அன்பினை..
பார்த்து ம‌லைத்து க‌லைத்து..
அந்த சொர்க்க‌மும் அனுப்பிடுமா உன்னை..
கேட்டுச்சொல் அன்பே.

Friday, September 01, 2006

உன் பக்கத்தில்..


உன் தோளில் படிந்த மலர் மாலை,
உன்னால் மேலும் அழகாக தெரிய,
உன்னை தொட்ட‌தில் சொக்கி,
மேலும் மேலும் மலர,

உன் வாசத்தில் மயங்கி,
மேலும் மேலும் மனம் வீச,
உன் வெட்கத்தில் நாணி,
மேலும் மேலும் சிவக்க,

கண்களும் விட்டு விலக மறுக்கும்,
காண கிடைக்காத காட்சியோ இது,

இலை மறை காயாக,
உன் வேல்விழிகள் அவனை நாட,

பெருமை கொள்ளாமல் அவன்,
உன் கரம் பற்றும் ஆர்வத்தில்,
உன் சேலை தொடும் அவசரத்தில்,
தன்னிலை மற‌ந்தான்,

மோகத்தின் உச்சியில் அவன்,
கை கொள்ளா உன் பேரழகையும்,
கண் கொள்ளா உன் செழிப்பினையும்,
ரசித்து ரசித்து மாய்ந்தான்,

அந்த கண்ணண் வாய்ச்சுவை அறிய,
அவன் சங்கிடம் கேட்க வேண்டுமாம்,
உன் எல்லையில்லா அருமைகளை அறிய,
என்னிடம் அல்லவா கேட்க வேண்டும்,

உன் இனிமைகளில் சிலிர்த்தவன் நான்,
உன் பார்வைகளில் லயித்தவன் நான்,
உன் விரல் தொட காத்திருந்தவன் நான்,

மனமேடையும் ஏமாந்து ஏங்குமே,
உன் பக்கத்தில் என்னை காணாமல்,
ஜென்மங்களும் மீண்டும் மாறுமே,
உன் பக்கத்தில் என்னை அமர்த்துமே.

Saturday, August 26, 2006

இந்நிலையும்..


அதிகாலை தென்றலின் இனிமை,
முதல் பனித்துளியின் தூய்மை,
அந்த பனிமலரின் மென்மை,
இதில் எது நிகர்..
உன் வசீகர பார்வைக்குமுன்.

உன் ஏகாந்ததில் மூழ்கிடவே ஆசை,
உன்னுள் என்னை நிரப்ப,
அழைப்பாயோ மாட்டாயோ..
தொடரும் இத்தவிப்புகளுக்கு,
விடை தெரிந்தும் தெரியாமல் நான்.

என் மனதின் நடுக்கங்களும்,
என் செயலின் தடுமாற்றங்களும்,
உன் பிரியங்களின் வாசலில் நிற்க..
திசை மாறி தொலைந்துதான்போனேன்.

உன் அழகின் அமுதமா,
உன் விழியின் வெப்பமா,
உன் சொல்லின் சுவையா,
இதில் எது எனக்கு..
ஏதும் இல்லை என்றே சொல்கிறாய்.

சேராத இணை கோடுகளுக்கு தெரியும்,
இந்நிலையும் பரமானந்தம் தான் என்று.
உன் ருசி கண்டதில்லையென்றபோதினிலும்,
இந்நிலையும் பரவசம் தான் என்றென்றும்.


View Stats