Tuesday, August 15, 2006

என்னில் நீ நிறைந்தால்..


என் அளவில்லா அன்பினில் நனைகையில்,
உனக்கு என்னென்ன தோன்றுமோ..

இத்தனை அழகையும் கண்டதில்லை நான்,
இத்தனை அறிவையும் அறிந்ததில்லை நான்,

என்றென்றும் மறையாமல் நீயே,
என் கண்ணிண் ரத்தினமணியாக‌,

என்றென்றும் தேயாமல் நீயே,
என் வானின் வெள்ளி நிலவாக,

தொடரும் உன் இம்சைகளில்,
என் உறக்கம் தொலைந்தது,

குறையாத உன் குறும்புகளில்,
என் தனிமையும் தீர்ந்தது,

உன் அழுகையின் ஆழத்தில்,
எனக்கு ஏனோ பசிக்கவும் இல்லை,

உன் அடங்களின் அழகில்,
எனக்கு நீ சலிக்கவும் இல்லை,

என் பொறுமையின் எல்லை என்ன,
எனக்கே தெரியவில்லை,

என்னில் நீ நிறைந்தால்,
காதலின் ஸ்பரிசங்கள் கூட தேவையில்லை..

3 Comments:

At 11:21 PM , Anonymous Anonymous said...

இத்தனை அறிவையும் அறிந்ததில்லை நான்

Nee Makku :-)

-= Kaanthi thaatha

 
At 2:26 AM , Anonymous Anonymous said...

nalla irruku.
padam lam superb

 
At 10:01 PM , Blogger lp said...

thnks:)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home


View Stats