உன்னையும் தாண்டி..

இன்னும் எத்தனை எத்தனை ஆசைகள்,
தீராது போல், உன் மேல் நான் கொண்ட காதல்,
தேங்கி கிடக்கின்றன ஒரு கோடி ஏக்கங்கள்,
மேலும் பல ஜென்மங்களுக்கும் போதுமானதாய்,
சொல்ல ஆயிரம் உண்டென்றபோதினிலும்,
விழியோரம் சில துளிகள்,சொல்லட்டும் மிச்சத்தை,
என் கண்களில் நீ, என் கனவுகளிலும் நீ,
என் எழுத்துக்களில் நீ, என் பேச்சிலும் நீ,
என் வெட்கத்தில் நீ, என் நானத்திலும் நீ,
என் புன்னகையில் நீ, என் மகிழ்ச்சியிலும் நீ,
என் நெஞ்சினில் நீ, என் சிந்தையிலும் நீ,
என் மடியினில் நீ, என் எல்லாவற்றிலும் நீயே,
அப்பப்பா போதும் போதும் நீ படுத்தும் பாடு,
உன் சுடரின் வெப்பத்தில் நான் உருகும்முன்,
உன்னையும் உன் தித்திப்பினையும் தாண்டி,
என் எண்ணங்கள் உயர வேண்டும்,
உன்னையும் உன் ஈர்ப்பினையும் தாண்டி,
என் எழுத்துக்கள் வளர வேண்டும்,
உண்மையில் நானும் சவுக்கியம்தான்,
உன் நினைவுகள் என்னை தீண்டும்வரை..
உண்மையில் நானும் சுகம்தான்,
உன் கனவுகள் என் ஆவலை தூண்டாதவரை..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home