Friday, August 04, 2006

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..


உன்னை பார்க்க வேண்டும்,
என்னுடனே நீ வேண்டும்,
எப்பொழுதும் நீ வேண்டும்,
நம் கனவுகளை பேச வேண்டும்,
நேரம் ஓடாமல் நிற்க வேண்டும்,
இப்படி இத்தனை தோன்றுகிறது,
உன்னை நினைக்கும் போதெல்லாம்.


மிக அருகில் நீ வேண்டும்,
உன் கைகளை பற்ற வேண்டும்,
உன் முகத்தை தொட வேண்டும்,
உன் காதலில், மழைச் சாரலில்,
திகட்ட திகட்ட நனைய வேண்டும்,
இப்படி இத்தனை பரவசம்,
உன்னை சிந்திக்கும் போதெல்லாம்.

இது எதுவும் சாத்தியம் இல்லை.. தெரியும் எனக்கு.
என் மனமோ, தெரிந்தும் புரிந்துகொள்ள மறுக்கிறது,
எவ்வளவு ஏக்கம் தான் அதற்கு,
இன்னும் உன்னையே சுற்றி சுற்றி வருகிறதே,

அடையாத சமாதானம், கிடைக்காத சந்தோஷம்,
எனினும் உன்னையே என் மனம் ஆவலுடன் நாட‌,
இங்கு செய்வதறியாது திண்டாடுவது நானல்லவோ,
என் எதிரிக்கும் வேண்டாம் இந்நிலை!

கையைச்சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

என்றும் திகட்டாமல் என் மனதில் நீ வசிக்க,
ஒரு துளி இன்பம், ஒரு முறை போதும்,
பாவம் இவ்வளவு அல்லல் படும் என் மனம்,
உன் தேன் சுவையில் ஒரு முறை நனையட்டுமே!

1 Comments:

At 10:13 PM , Anonymous Anonymous said...

I dont have words

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home


View Stats