ஒரு முறை வா..

அந்த அழகிகளும் அழகல்ல உன்னைவிட,
மின்னும் வைரங்களும் தூய்மையல்ல உன்னைவிட,
மெலிந்து தேய்ந்தாலும்..
சந்தன சிற்பம் தோற்குமே உன் பக்கத்தில,
இன்னும் எத்தனை சொல்ல..
உன் அருகாமைகள் உணர்த்திய அற்புதங்களை,
நீ இன்றி பிழைக்கவும் முடியுமோ,
நீ இன்றி வாழ்க்கையும் தொடருமோ,
என் வெறுமைகளை வெல்லவே ஒரு முறை வா,
என் தனிமைகளை தொலைக்கவும் சொல்லித்தா,
நீ வேண்டும் வேண்டும் என்று..
மீண்டும் மீண்டும் கேட்கும் பிள்ளைகள்,
இந்த மழலைகளின் மொழிகளை..
கேட்டுப்போக ஒரு முறை வா,
இத்தனை அளவில்லா அன்பினை..
பார்த்து மலைத்து கலைத்து..
அந்த சொர்க்கமும் அனுப்பிடுமா உன்னை..
கேட்டுச்சொல் அன்பே.

