Thursday, August 17, 2006

என் வரமாய் நீ..


யாருக்கும் கிட்டுமோ இவ்வைரம்,
என்று தினம் தினம் நான் மெச்ச,

ஒரு கோடி அம்சங்கலுடன்,
எனக்காகவே நீ பிறக்க‌‌,

ஒரு லட்சம் கனவுகளுடன்,
உனக்காகவே நான் இருக்க,

சின்னஞ்சிறு மலராயினும்,
எல்லையில்லாமல் கற்பிக்கிறாய்,

துளி தீர்த்தமாயினும்,
திருப்தியாய் தாகம் தீர்க்கிறாய்,

என் வரமாய் நீ வர‌,
மீண்டும் இறை நம்பிக்கை பிறக்கிறது,

மழையாய் நீ மழலை பேச,
மீண்டும் பிள்ளை பருவம் புரிகிறது,

உன் மரகத சிரிப்பினில்,
மருந்தின்றி மனமும் குணமாகிறது,

என் பளிங்கு சிற்பமாய் நீ,
என் அதிசயமாய் நீ,
என் ஆசைகளின் உருவமாய் நீ,
என் அடைக்கலமாய் நீ,

என் ஆனந்ததின் எல்லையாய் நீ,
என் அமிர்தமாய் நீ,
என் வாழ்வின் அர்த்தமாய் நீ,
நான் வாழ காரணமாய் நீயே,

என் கண்மணி உன்னை,
நாளும் நாளும் விதவிதமாய்,
முடிந்தவரை ரசிப்பேன்,
தெரிந்தவரை சீராட்டுவேன்,
இறுதிவரை கொண்டாடுவேன்..

9 Comments:

At 4:44 PM , Anonymous Anonymous said...

romba nalla irukku...

Soma

 
At 11:17 PM , Anonymous Anonymous said...

துளி தீர்த்தமாயினும்,
திருப்தியாய் தாகம் தீர்க்கிறாய்

Arputhamana arthangal,
aazhamana unarvugal!!

-= Kaanthi thaatha

 
At 6:24 PM , Blogger lp said...

thnks ranga:)

 
At 6:26 PM , Blogger lp said...

ithu yaaru.. thaatha??
whoever u r..thnks on commenting.

 
At 10:00 PM , Anonymous Anonymous said...

mika magizhchi, naan oru vayothigan, etho kadaisi kaalathil nerathai kadathikondu irukirane.

-= Kaanthi thaatha

 
At 12:00 AM , Blogger kasiraja said...

very nice ma very soulful

 
At 12:00 AM , Blogger kasiraja said...

rombha nala iruku soulful

 
At 10:15 PM , Blogger lp said...

Mr.siyo nqoba ...thnks!!

 
At 9:57 AM , Anonymous swedha said...

Beautiful!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home


View Stats